Monday, December 21, 2015

கோட்டை ஸ்ரீஅழகிரிநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

கோட்டை ஸ்ரீஅழகிரிநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு (பரமபத வாசல் திறப்பு)
சொர்க்க வாசல் கோவில் என்று பலரால் அழைக்கபடும் சேலம் கோட்டை ஸ்ரீஅழகிரிநாத சுவாமிகோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் இன்று காலை 5.00 அளவில் திறக்கப்பட்டு கோட்டை ஸ்ரீஅழகிரிநாத சுவாமி பரமபத வாசலில் எழுந்தருளி சேவை சாதித்தார்..!
















சேலம் சின்னதிருப்பதி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

சேலம் சின்னதிருப்பதி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு (பரமபத வாசல் திறப்பு)
சேலம் சின்னதிருப்பதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் இன்று காலை 5.00 அளவில் திறக்கப்பட்டு ஸ்ரீ வெங்கடேச சுவாமி பரமபத வாசலில் எழுந்தருளி சேவை சாதித்தார்..!






Sunday, December 13, 2015

மேச்சேரி பத்ரகாளியம்மன்

மேச்சேரி பத்ரகாளியம்மன்

சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேச்சேரி பத்ரகாளியம்மன் உள்ளது. இந்த கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன

அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கை ஆகும்.
பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக சன்னிதியில் காலபைரவர், சித்திவிநாயகர், நாகபுற்று(நாகலிங்கம்), வீரபுத்திரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் கருவறையின் வெளிப்புற சுவர்களில் நர்த்தனகணபதி, மகேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, கவுமாரி, துர்க்கை போன்ற தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரகார மண்டபத்தில் வீரமாத்தி அம்மன்கோவில் உள்ளது.



















Like Us