Sunday, June 19, 2016

சேலம் மாவட்டம் மல்லூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்

சேலம் மாவட்டம் மல்லூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்.. இது மலை மேல் ஒரு குடவரை கோவிலாக உள்ளது.. இங்கு பெருமாள் சயன கோலத்திலும் நின்ற கோலத்திலும் இருக்கிறார்.. இங்கு 12 நாயன்மார்கள் சிலையும் நிறுவபட்டுள்ளது.. இந்த கோவிலின் அடிபகுதியில் ஒரு சிவன் ஒன்று உள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒலி பெருமாள் மீது படுகிறது







Thursday, June 9, 2016

சேலம் வாய்கால்பட்டறை ஸ்ரீ அய்யனரப்பன் தேவம்

சேலம் வாய்கால்பட்டறை ஸ்ரீ அய்யனரப்பன் தேவம் இன்று நடந்து முடிந்தது.. நேற்று இரவு பூஜை கூடை வந்து இன்று அய்யனரப்பன் தேவம் நடந்தது










Monday, June 6, 2016

சேலம் புதூர் கல்லாங்குத்தூர் ஸ்ரீ மாரியம்மன் திருவிழா

சேலம் புதூர் கல்லாங்குத்தூர் ஸ்ரீ மாரியம்மன் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது..
இன்று பொங்கல் வைத்தல், கரகம் மற்றும் அழகு குத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது..



சேலம் ஜலகண்டபுரத்தில் ஸ்ரீ உருத்திர வன்னிய மகாராஜா கோவில்

சேலம் ஜலகண்டபுரத்தில் ஸ்ரீ உருத்திர வன்னிய மகாராஜா கோவில் உள்ளது..
முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடைபெறுகிறது....



சேலம் ஸ்ரீ எல்லை முனீஸ்வரன்

சேலம் தாரமங்கலம் சாலையில் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஸ்ரீ எல்லை முனீஸ்வரன் கும்பாபிஷேகம் நாளை 9:30 முதல் 10:30 வரை நடைபெற உள்ளது..
அதனையொட்டி இன்று கணபதி ஹோமம் மற்றும் தீர்த்த குடம் நிகழ்ச்சி நடந்தது



சேலம் நெத்திமேடு ஸ்ரீ காளியம்மன்

சேலம் நெத்திமேடு ஸ்ரீ காளியம்மன் தங்க கவசத்தில் ஜொலிக்கும் அம்மன்


சேலம் அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்

சேலம் அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்
சேலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை. கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
பழமையானது.
சிறப்பு:
சித்தர் கோவிலில் கிரிவலம் நடப்பது இங்குதான். திருவண்ணமலைக்கு அடுத்தபடியாக இங்குதான் கிரிவலம். இங்கு பௌர்ணமி மாலை 7.30 அடிவார கோவிலில் தொடங்கி 19km சுற்றி அடுத்தநாள் காலை 5 மணிக்கு கிரிவலம் முடிவடைகிறது.
பொது தகவல்:
கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது.
இத்திருக்கோயிலில் சித்ராபவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர்.
அடிவார கோவில்:
இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் .
இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.
அடிவார கோயிலுக்குள் பத்து தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமானவை நந்தி தீர்த்தம் மற்றும் காந்த தீர்த்தம் ,
காந்த தீர்த்தத்தை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் உப்பு, மிளகு வாங்கிப் போடுகிறார்கள் இதில்.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட "ஞானசற்குரு பால முருகன்" கோயில் உள்ளது.
எங்கும் இல்லாத நாரதர் உருவ சிலை, சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் உருவ சிலைகள் உள்ளது.
இது "அமாவாசை கோயில்” ஆகும்.
சித்தர்:
காலங்கி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக் கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு.
திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர்.
இவர் இங்குள்ள மூலிகை உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பியது
இந்த மலையில் தான். அதனாலேயே இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"
என்று பெயர் பெற்றது. திருமூலரின் உத்தறவின்படி இங்கேயே இருந்து அருள்பாவிக்கிறார்.
இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும்.
இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மாத்திரம் சொல்லியே அணுகவேண்டும்.
இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார்.
ஒன்பது பாஷாணகளில் இதுவும் ஒன்று.

வேம்பனேரி ஸ்ரீ அய்யனரப்பன் கோவில்

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வேம்பனேரி ஸ்ரீ அய்யனரப்பன் கோவில் திருவிழா கிராமிய மணம் மாறாமல் நடந்து வருகிறது....முதல் நாளான இன்று சக்தி அழைத்தலுடன் விழா தொடங்கியது..
இன்று ஐய்யன் உரி மாலை போட்டுக்கொண்டு விளக்கு கூடையுடன் 7 ஊரை வலம் வந்தார்... நாளை ராமெரமனையும். நாளைய மறுநாள் மஞ்சமெரமனையும் மற்றும் வீரகாரனுக்கு காபூஜையும் நடைபெறும்...










சேலம் சின்னபுதூர் ஸ்ரீ அய்யனரப்பன் தேவம்

சேலம் சின்னபுதூர் ஸ்ரீ அய்யனரப்பன் தேவம்...
சிறப்பு அலங்காரத்தில் அய்யனரப்பன் மற்றும் வீரகாரன் சுவாமி






ஸ்ரீ ஆலங்கொட்டை முனியப்பன் (பூட்டு முனியப்பன்)

ஸ்ரீ ஆலங்கொட்டை முனியப்பன் (பூட்டு முனியப்பன்)
சேலம் ஏற்காடு பிரதான சாலையில் கலெக்டர் பங்களா எதிரில் உள்ளது பூட்டு முனியப்பன் முனியப்பன் கோவில்..
மிகவும் பழமையானதும் சக்திவாய்ந்ததுமான பூட்டு முனியப்பன் கிழக்கு நோக்கி ஆலங்கொட்டைமரத்து அடியில் அமைந்துள்ளது ... இங்கு பூட்டு போட்டு கும்பிடுவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்





Like Us