Wednesday, July 30, 2014
Tuesday, July 29, 2014
கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி
சேலத்தில் ஆடிப்பண்டிகை திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது. சேலத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். சேலத்தில் எட்டு பேட்டைகளையும் கட்டியாளும் அம்மனாக கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திகழ்கிறது. கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது, சேலம் மாநகரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்
Thursday, July 24, 2014
ஆடிமாத பிறப்பையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடிமாத பிறப்பையொட்டி நேற்று சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோட்டை மாரியம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆடி மாத பிறப்பு
ஆடி மாதம் பிறந்தாலே சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பண்டிகை உற்சாக கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப் பெருக்கு உற்சவமும், அதன் பின்னர் கோட்டை மாரியம்மன்கோவில், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில், குகை மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் ஆடிப்பண்டிகை விழா கோலாகலமாக நடத்தப்படும்.
நேற்று ஆடி மாதப் பிறப்பை சேலம் கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வெள்ளிக்கவசத்தில் கோட்டை மாரியம்மன்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு விசேஷ அபிசேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு விசேஷ அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு தரிசித்தனர். மேலும் ஏராளமான பெண் பக்தர்கள், வேண்டுதலுக்காக கோவிலில் உள்ள முகூர்த்தக்காலில் மஞ்சள் கயிறு மற்றும் வளையல்களை கட்டினார்கள்.
தங்கக்கவசத்தில் பலபட்டரை மாரியம்மன்
அதேபோல் சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மனுக்கும் நேற்று காலை விசேஷ அபிசேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. குகை பகுதியில் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவிலிலும் நேற்று காலை அம்மனுக்கு விசேஷ அபிசேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.
சேலம் அரிசிப்பாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு காலையில் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து பல வண்ண மலர்கள் மற்றும் எலுமிச்சை பழங்கள் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தன. அம்மாபேட்டை பட்டை கோவில் அருகே உள்ள சின்னமாரியம்மன் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பலபட்டரை மாரியம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதுபோல அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில், நெத்திமேடு காளியம்மன், லீபஜார் காளியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதேபோல் மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்

சேலத்தில் ஆடிப்பண்டிகை
சேலத்தில் ஆடிப்பண்டிகை திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் 22–ந்தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி கூடைகூடையாக பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
கோட்டை மாரியம்மன்
சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். சேலத்தில் எட்டு பேட்டைகளையும் கட்டியாளும் அம்மனாக கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திகழ்கிறது. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா 22–ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிசேகமும், விசேஷ பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.
பூக்கூடைகளுடன் ஊர்வலம்
மாலை 5 மணிக்கு சோழ வேளாளர் சமூகம் டிரஸ்ட் சார்பில் கிச்சிப்பாளையம் பஜனை மடம் கந்தசாமி தெருவில் உள்ள நடராஜர் பஜனை மடத்தில் இருந்து டிரஸ்ட் தலைவர் சு.துரைசாமி தலைமையில் பூக்கூடைகளுடன் ஊர்வலம் புறப்பட்டது. இதில், நிர்வாக குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் சமூக மக்கள், பக்தர்கள் வீடுகளில் தட்டுகளில் வழங்கிய பூக்களை சேகரித்து கூடைகூடையாக தலைச்சுமையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கிச்சிபாளையம் பஜனை மடம் வீதியில் தொடங்கிய இந்த பூக்கூடை ஊர்வலம் முனியப்பன் கோவில் தெரு, சன்னியாசிக்குண்டு மெயின்ரோடு, கருவாட்டு பாலம், கல்லாங்குத்து மெயின்ரோடு, கன்னிகா பரமேஸ்வரி கோவில், டவுன் போலீஸ் நிலையம் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை நோக்கி வந்தது.
கூடைகூடையாக மலர்கள்
பூக்கூடை ஊர்வலம் கோட்டை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும், கோவில் பிரகாரத்தில் மலர்களுடன் கோவிலை 3 முறை வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பூச்சாட்டுதலும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் கூடைகூடையாக மலர்களை அம்மனுக்கு கொட்டி படைத்து வழிபட்டனர்.
பூச்சாட்டுதல் உற்சவத்தில் சேலம் மாநகரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். இந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் உமாதேவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு கோவில்களில் பூச்சாட்டுதல்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் உற்சவத்தை தொடர்ந்து சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி கேட் சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன், அம்மாப்பேட்டை மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்னமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன் ஆகிய 8 பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதல் உற்சவத்துடன் ஆடிப்பண்டிகை தொடங்கியது.
பொங்கல், உருளுதண்டம்
கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை விழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 12-ந் தேதிவரை நடக்கிறது. பூச்சாட்டுதல் விழாவை தொடர்ந்து கோட்டை மாரியம்மனுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் விசேஷ அபிசேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைத்தொடர்ந்து வருகிற 29-ந் தேதி கம்பம் நடுதல், திருக்கல்யாணமும், அடுத்த மாதம் ஆகஸ்டு 3-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
4-ந் தேதி சக்தி அழைப்பு, 5-ந் தேதி சக்தி கரகம், 6-ந் தேதி, 7-ந் தேதி மற்றும் 8-ந் தேதிகளில் பொங்கல், உருளுதண்டம், 8-ந் தேதி திருத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ந் தேதி அதிகாலை கம்பம் கங்கையில் சேர்த்தல், 10-ந் தேதி சத்தாபரணம், 11-ந் தேதி வசந்த உற்சவம், 12-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது

Monday, July 14, 2014
Thursday, February 6, 2014
Subscribe to:
Posts (Atom)