சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி திருக்கோவில்..
சேலத்தில் இருக்கும் பெருமாள் கோவில்களில் மிகவும் பழமையானது சேலம் கோட்டையில் அமைத்துள்ள ஸ்ரீ அழகிரிநாத சுவாமி திருக்கோவில்.. புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று நம் கோட்டை பெருமாள் கோவில் சிறப்புகளை காண்போம்
வில்வ மரத்தடியில் குழந்தையாக தோன்றிய திருமகளை அழகியவல்லி எனப்பெயரிட்டு பிருகு முனிவர் வளர்த்தார், ஸ்ரீ என்னும் லக்ஷிமி தேவியே இந்த கோவிலில் எழுந்தருளியதாக கோவில் வரலாறு கூறுகிறது.ஸ்ரீசைலம், ஸ்ரீ சைலபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சேலம் என்று மருவியதாக தலவரலாறு கூறுகிறது, நான்கு கரங்களுடன் பெருமாள் அழகிரிநாதராக எழுந்தருளி, அழகியவல்லியை கரம்பிடித்து பிருகு முனிவருக்கு சாப விமோர்ச்சனம் கொடுத்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது..
ஆறடி உயரம் கொண்ட அற்புத சிலை வடிவாக சங்கு,சக்ர,கதாபாணியாக அழகிரிநாதர் சேவை சாதிக்கிறார்.பெருமாளுக்கு இணையாக சிம்ம முகத்துடன் எட்டுஅடி உயர ஆஞ்சநேயர் கம்பிரமாக காட்சிதருகிறார்..
வைகுண்ட ஏகாதேசியன்று இங்கு சொர்கவாசல் திருப்பு நடைபெறுகிறது.. இதனால் இந்த கோவிலை சொக்கவாசல் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது
No comments:
Post a Comment