சேலம் அருள்மிகு செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் தல வரலாறு மற்றும் சிறப்பு..
எட்டு பேட்டை மாரியம்மனில் ஒன்றான செவ்வாய்ப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் தல வரலாற்றை இன்று காண்போம்..
இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சந்தை கூடும் பகுதியாக செவ்வாய்ப்பேட்டை இருந்தது.சந்தைக்கு வந்தவர் ஒருவர் காலில் ஒரு குழவி போன்ற கல் ஒன்று தடுக்கிட அதை சாலை ஓரத்தில் போட்டு சென்றார்,அடுத்த வாரமும் சந்தைக்கு சென்ற போது அதே குழவிக்கல் பாதையில் கிடக்க வியப்படைந்தார்.. அப்போது அங்கு இருந்த ஒரு மூதாட்டி மூலம் அருள்வாக்கு கிடைத்து. அது குழவிக்கல் அல்ல மாரியை அந்த உருவில் வந்தவள் என்றும், வேப்பமரத்தடியில் அதனை நிறுவி கோவில் எழுப்பிட உத்தரவாயிற்று.அப்படியே செய்தனர்.
கோவில் நிறுவிய இடம் அரசின் இடம், சாலையை அகலப்படுத்த முயன்ற 'லாங்லி ' என்னும் மாவட்ட ஆட்சியர் கோவிலை அகற்றி வேறு இடத்தில் வைக்க உத்தரவிட்டார்,அதற்க்கு முன்பாக கோவிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்பி, பழைய கோவில் போல தோற்றமளிக்க செய்தனர் ஊர் பொது மக்கள், இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் லாங்லி , அவர்களை கைது செய்து, கூண்டில் ஏற்றினார்,குற்றம் சாட்டப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அம்மனே குழந்தை வடிவில் வந்து நீதிபதி முன் தோன்றி அவர்களை குற்றவாளிகள் இல்லை!, என்று நிரூபித்ததாம்,இது உண்மையில் நடத்த சம்பவம்,

கோவில் சிறப்புக்கள்:
====================
எட்டு பேட்டை மாரியம்மனில் திருத்தேர் கொண்ட ஒரே மாரியம்மன், சிறிய உற்சவமூர்த்தி கொண்ட கோவில்.. சிறிய உற்சவமூர்த்தி என்றாலும் சேலத்தில் வேறு எங்கும் காணாத அலங்காரம் இந்த அம்மனுக்கு செய்யப்படுகிறது.
"கோட்டை மாரியம்மனை ஜனக்கட்டு என்றும்,செவ்வாய் பேட்டை மாரியம்மனை பணக்கட்டு" என்றும் ஒரு பேச்சிவழக்கு உண்டு.. அதாவது பணத்தில் உயர்ந்தவள் செவ்வாய் பேட்டை மாரியம்மன் என்று கூறுவர்..

சர்வம் சக்திமயம்! ஓம் சக்தி!!
உங்கள் பகுதி கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை எங்களுக்கு தெரியபடுத்துங்கள். அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்
No comments:
Post a Comment