Saturday, October 31, 2015

முனிகளால் சூழ்ந்த சேலம்

முனிகளால் சூழ்ந்த சேலம்...
சேலத்தில் எட்டுதிக்கிலும் முனிகள் ராஜ்ஜியம் செய்கிறது...மூலைக்கு மூலை காவலாக சந்துக்கு சந்து காவலாக ஈசன் முனீஸ்வரன் இருக்கிறார் சேலத்தில்.....
ஸ்ரீ வெண்ணங்கொடி  முனியப்பன், ஸ்ரீ இருட்டுகல் முனியப்பன், ஸ்ரீ மேட்டூர் முனியப்பன்,ஸ்ரீ சின்ன முனியப்பன் ,ஸ்ரீ ஆலகொட்டை முனியப்பன்(பூட்டு முனியப்பன்),ஸ்ரீ சாலையோர முனியப்பன்,ஸ்ரீ ஜெயில் முனியப்பன் ,ஸ்ரீ வழுக்குபாறை முனியப்பன், ஸ்ரீ கொட்டங்கல் முனியப்பன் என பல முனியப்பன் சேலத்தை சூழ்த்து உள்ளது...

ஸ்ரீ வெண்ணங்கொடி  முனியப்பன்
=====================

சேலத்தின் ராஜாவாக சேலத்தின் மைய பகுதியான ஜாகிர்அம்மாபாளையதில் முருக்கு மீசையுடன் கம்பிரமாக வெண்ணங்கொடி நிழலில் அமர்ந்து இருக்கிறார் முனீஸ்வரன். சேலத்தில் மிகவும் பழையான மிகவும் சக்திவாய்த்த முனியப்பன்,

ஸ்ரீ இருட்டுகல் முனியப்பன்
=================

சேர்வராயன் மலை அடிவாரத்தில் கையில் செங்கோல் ஏந்தி கம்பிரமாக இருக்கிறார் இருட்டுகல் முனியப்பன். இங்கு செய்வினை போன்ற தீய சக்தியை அழிபவராக இருக்கிறார் ஈசன் ஸ்ரீ இருட்டுகல் முனியப்பன்

ஸ்ரீ மேட்டூர் முனியப்பன்
===============

மேட்டூர் ஆணைக்கு அடியில் மிக பழமையான மேட்டூர் முனியப்பன் கோவில் உள்ளது. ஆடி 18 க்கு முகவும் சிறப்பாக பண்டிகை நடைபெறும்

ஸ்ரீ சின்ன முனியப்பன்
==============

சேலத்தில் இருத்து கன்னங்குறிச்சி போகும் வழியில் சின்னதிருப்பதி அருகில் உள்ளது.. இங்கு மாசியில் மிக சிறப்பாக பண்டிகை நடைபெறும்

ஸ்ரீ ஆலகொட்டை முனியப்பன்(பூட்டு முனியப்பன்),
===============================

சேலம் கலெக்டர் பங்களாக்கு எதிரில் உள்ளது... இந்த முனியப்பன் ஆலகொட்டை முனியப்பன் என்றும் பூட்டு முனியப்பன் என்றும் அழைக்கப்படுகிறது..

ஸ்ரீ சாலையோர முனியப்பன்
==================

ஏற்காடு செல்லும் போது 13 வது கொண்டைஊசி வலைவில் இருக்கும் இந்த முனியப்பன் மிகவும் சக்திவாய்த்த முனியப்பன்... தை பொங்கல் அன்று இங்கு முப்பூசை காவு கொடுத்து மக்கள் வழிபடுகிறனர்

ஸ்ரீ ஜெயில் முனியப்பன்
===============

சேலம் அஸ்தம்பட்டி ரௌண்டன அருகில் உள்ள இந்த முனியப்பனுக்கு  தை பொங்கல் அன்று முகவும் சிறப்பாக பண்டிகை நடைபெறும்

ஸ்ரீ சாலையோர முனியப்பன்
==================

ஏற்காடு செல்லும் போது 13 வது கொண்டைஊசி வலைவில் இருக்கும் இந்த முனியப்பன் மிகவும் சக்திவாய்த்த முனியப்பன்... தை பொங்கல் அன்று இங்கு முப்பூசை காவு கொடுத்து மக்கள் வழிபடுகிறனர்
ஜெயில் முனியப்பன்


ஸ்ரீ வழுக்குபாறை முனியப்பன் , ஸ்ரீ கொட்டங்கல் முனியப்பன்
======================================
இந்த இரண்டு முனியப்பன் சுவாமிகளும் சேலம் வழுக்குபாறை பகுதியில் உள்ளது..வழுக்குபாறை சேலம் கோல்டன் கேட்ஸ் பள்ளிக்கு மிக அருகில் உள்ள ஒரு மலை ஆகும். இங்கு பெண்கள் செல்லும் போது முனி பிடிபதாக கூறபடுகிறது

Wednesday, October 28, 2015

சேலம் அய்யந்திருமளிகை மாரியம்மன்

நவராத்திரி ஒவ்வொரு நாளும் சேலம் அய்யந்திருமளிகை மாரியம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது... அந்த  அலங்காரத்தின் முழு தொகுப்பு ஒரு படமாக......

Tuesday, October 27, 2015

சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன்

சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் பௌா்ணமி பூஜை சிறப்பு அலங்காரம்

Monday, October 26, 2015

சேலம் கோட்டை மாரியம்மன் பாலாலயம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலை, புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள, கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெய்வ உருவங்கள் அகற்றப்பட்டு, புதிதாக செய்யப்பட்டது. அதற்கான பாலாலயம் நிகழ்ச்சிக்கு, நேற்று (26-10-2015) கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. காலை, 9.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கிய நிகழ்ச்சியில், விநாயகர், மதுரை வீரன், பொம்மி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால் கோட்டை மாரியம்மன் கருவறை சிலை மிக பழமையானதால் அதற்கு பாலாலயம் செய்யகூடாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தால் கருவறை சிலைக்கு பாலாலயம் நேற்று நடைபெறவில்லை

Thursday, October 22, 2015

சேலம் சுகவனேசுவரர் கோவில்

சேலம் சுகவனேசுவரர் கோவில் வளாகத்தில் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.. நாலுகால் மண்டபத்தில் மகிஷாசூரனுடன் யுத்தம் செய்து வதம் செய்யும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் நடைபெற்றது

சேலம் அய்யந்திருமளிகை மாரியம்மன்

சேலத்தில் நவராத்திரி கோலாகலம்... நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று(21-10-2015) சேலம் அய்யந்திருமளிகை மாரியம்மன் காளிகாம்பாள் அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி..........

சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன்

நவராத்திரி நிறைவு நாளான இன்று சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் வளாகத்தில் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது . அப்போது அம்மன் கறுத்த சடை விரித்து குதிரை வாகனத்தில் அருள்பாலித்தாள்.. அப்போது சாமி வேடம் அணிந்த சிறுவர்களுக்கு சக்தி அழைக்கபட்டு மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது

Monday, October 19, 2015

சேலம் அய்யந்திருமளிகை மாரியம்மன்

சேலத்தில் நவராத்திரி கோலாகலம்... நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று(19-10-2015) சேலம் அய்யந்திருமளிகை மாரியம்மன் ஸ்ரீ லக்ஷிமி அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. ‪#‎salem‬ ‪#‎navratri‬ ‪#‎god‬ ‪#‎mariamman‬

Sunday, October 18, 2015

சேலத்தில் நவராத்திரி கோலாகலம்...

நவராத்திரியின் ஆறாம் நாளான நேற்று(18-10-2015) சேலம் தாதகாப்பட்டி அருள்மிகு ஸ்ரீ வழிவாய்க்கால் காளியம்மன் மூலவருக்கு கேரளா ஸ்ரீ பகவதி அம்மன் சிறப்பு அலங்காரம்..

சேலம் சின்னத்திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்

புரட்டாசி கடைசி வார சனிக்கிழமையை தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.. காலை முதல் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை 5:30 மணி அளவில் தேர் இழுக்கபட்டது ... கோவிந்தா கோவிந்தா

Like Us