Monday, October 26, 2015
சேலம் கோட்டை மாரியம்மன் பாலாலயம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலை, புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள, கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெய்வ உருவங்கள் அகற்றப்பட்டு, புதிதாக செய்யப்பட்டது. அதற்கான பாலாலயம் நிகழ்ச்சிக்கு, நேற்று (26-10-2015) கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. காலை, 9.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கிய நிகழ்ச்சியில், விநாயகர், மதுரை வீரன், பொம்மி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால் கோட்டை மாரியம்மன் கருவறை சிலை மிக பழமையானதால் அதற்கு பாலாலயம் செய்யகூடாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தால் கருவறை சிலைக்கு பாலாலயம் நேற்று நடைபெறவில்லை
Labels:
கோட்டை,
சேலம்,
பாலாலயம்,
மாரியம்மன்
Location:
Salem, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment