Tuesday, November 3, 2015

சேலம் ஊத்துமலை ஸ்ரீ சக்ர மஹா காலபைரவர்

சேலம் ஊத்துமலை ஸ்ரீ சக்ர மஹா காலபைரவர் நேற்று (03-11-2015)தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது ..

இங்கு அனைத்து அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது அதுவும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் வெகு விமர்சியாக ஊத்துமலை பைரவருக்கு பூஜை நடைபெறுகிறது.

அடுத்த மாதம் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி அன்று(03-12-2015) காலபைரவர் பிறந்தநாள் ஆகும், அன்று வெகுவிமர்சையாக தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற உள்ளது

"சூலத்தால் பாவத்தை நீக்கும் கால பைரவர்"

சிவனின் 64 வடிவங்களில் கால பைரவர் வடிவம் சிறப்பானது. யாகம், ஹோமம், திருமணம், கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்களின்போது முதல் கடவுளான விநாயகரை வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்த விநாயகர் பூஜைக்கு பின் பைர வரை தியானித்து வணங்குவார்கள். பைரவர் எல்லா சிவன் கோவில்களிலும் தனி சன்னதியில் அருள்புரிவார்.

வயிரவர் என்று தமிழில் வழங்கப்படும் இந்த மூர்த்திக்கு வடமொழியில் பைரவர் என்று பெயர். அன்பு வடிவமான சிவபெருமான், தீய சக்திகளை அழிப்பதற்காக ஆவேச நிலையில் எடுத்த வடிவமே பைரவராகும். சிவன் கோவில்களில் இந்த மூர்த்தியே காவல் தெய்வமாக விளங்குகிறார். காலனாகிய எமனையே சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த மூர்த்தி இவர்.

எனவே இவரை கால சம்ஹாரமூர்த்தி என வழிபாடு செய்கின்றனர். திரிசூலம், உடுக்கை ஆகியவற்றை கையில் ஏந்தி சிவன் பைரவராக வந்து யானையை கொன்று அதன் தோலினை உரித்த காட்சியை கண்ட உமையவள் அஞ்சினாள். அதனை கண்ட சிவன் சிரித்தார் என அப்பர் பைரவரை பற்றி தன் தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

பைரவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும், திருமண தடைகள் விலகும். சனிக்கிழமைகளில் மணமிக்க மலர்களால் பைரவரை அர்ச்சித்து வழிபட்டால் சனி தோஷங்களும், நவக்கிரக தொல்லைகளும் நீங்கும். தேய்பிறை அஷ்டமி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தை பேறு கிட்டும்.

வறுமை நீங்கவும், செல்வ செழிப்பு ஏற்படவும் பதினோரு அஷ்டமி திதி தினங்களில் நெய் விளக்கேற்றி தொடர்ந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இவரே காசியில் கால பைரவராக வீற்றிருக்கிறார். காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்.
அப்படி இறந்தவர்களின் பாவத்தை கால பைரவரே தன் சூலத்தால் போக்குகிறார். பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவனின் திருவடியை அடைகின்றன. இதற்கு காரணமாக இருக்கும் காலபைரவரை வணங்குவோம்













No comments:

Post a Comment

Like Us