Wednesday, October 5, 2016
சேலம் அருள்மிகு செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் தல வரலாறு மற்றும் சிறப்பு
சேலம் அருள்மிகு செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் தல வரலாறு மற்றும் சிறப்பு..
எட்டு பேட்டை மாரியம்மனில் ஒன்றான செவ்வாய்ப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் தல வரலாற்றை இன்று காண்போம்..
இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சந்தை கூடும் பகுதியாக செவ்வாய்ப்பேட்டை இருந்தது.சந்தைக்கு வந்தவர் ஒருவர் காலில் ஒரு குழவி போன்ற கல் ஒன்று தடுக்கிட அதை சாலை ஓரத்தில் போட்டு சென்றார்,அடுத்த வாரமும் சந்தைக்கு சென்ற போது அதே குழவிக்கல் பாதையில் கிடக்க வியப்படைந்தார்.. அப்போது அங்கு இருந்த ஒரு மூதாட்டி மூலம் அருள்வாக்கு கிடைத்து. அது குழவிக்கல் அல்ல மாரியை அந்த உருவில் வந்தவள் என்றும், வேப்பமரத்தடியில் அதனை நிறுவி கோவில் எழுப்பிட உத்தரவாயிற்று.அப்படியே செய்தனர்.
கோவில் நிறுவிய இடம் அரசின் இடம், சாலையை அகலப்படுத்த முயன்ற 'லாங்லி ' என்னும் மாவட்ட ஆட்சியர் கோவிலை அகற்றி வேறு இடத்தில் வைக்க உத்தரவிட்டார்,அதற்க்கு முன்பாக கோவிலுக்கு சுற்றுச்சுவர் எழுப்பி, பழைய கோவில் போல தோற்றமளிக்க செய்தனர் ஊர் பொது மக்கள், இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் லாங்லி , அவர்களை கைது செய்து, கூண்டில் ஏற்றினார்,குற்றம் சாட்டப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அம்மனே குழந்தை வடிவில் வந்து நீதிபதி முன் தோன்றி அவர்களை குற்றவாளிகள் இல்லை!, என்று நிரூபித்ததாம்,இது உண்மையில் நடத்த சம்பவம்,

கோவில் சிறப்புக்கள்:
====================
எட்டு பேட்டை மாரியம்மனில் திருத்தேர் கொண்ட ஒரே மாரியம்மன், சிறிய உற்சவமூர்த்தி கொண்ட கோவில்.. சிறிய உற்சவமூர்த்தி என்றாலும் சேலத்தில் வேறு எங்கும் காணாத அலங்காரம் இந்த அம்மனுக்கு செய்யப்படுகிறது.
"கோட்டை மாரியம்மனை ஜனக்கட்டு என்றும்,செவ்வாய் பேட்டை மாரியம்மனை பணக்கட்டு" என்றும் ஒரு பேச்சிவழக்கு உண்டு.. அதாவது பணத்தில் உயர்ந்தவள் செவ்வாய் பேட்டை மாரியம்மன் என்று கூறுவர்..

சர்வம் சக்திமயம்! ஓம் சக்தி!!
உங்கள் பகுதி கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை எங்களுக்கு தெரியபடுத்துங்கள். அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்
சேலம் கோட்டை மாரியம்மன் சிறப்புகள்
சேலம் கோட்டை மாரியம்மன் சிறப்புகள்..
சேலம் மாநகரில் "எட்டு பேட்டையை கட்டியாளும் கோட்டை மாரியம்மன்" என்ற சிறப்பை பெற்ற கோவில் கோட்டை மாரியம்மன் கோவில்.செவ்வாய்பேட்டை ,பொன்னம்மாபேட்டை ,குகை,அம்மாபேட்டை,சஞ்சீவிராயன்பேட்டை,கிச்சிபாளையம்,குமரசாம்பட்டி ஆகிய எட்டு பேட்டைகளையும் கட்டி ஆள்பவள் இவளே!!
இந்த திருக்கோவில் மணிமுத்தாறு நதிகரையில் அமைத்துள்ளது,கோட்டைமாரியம்மன் அக்னி திசையை நோக்கியவாறு வலது மேல்கரத்தில் நாகபாசமும் உடுக்கையும் கொண்டு, இடது மேல்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் கொண்டு வலது முன்கரத்தில் சூலமும் இடது முன்கரத்தில் கபாலமும் கொண்டு காட்சிதருகிறாள்..
ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும். இங்கு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்ட பூ கொண்டே மற்ற அம்மன் கோவிலில் பூச்சாட்டல் நடைபெறுவது வழக்கம்..பண்டிகையின் போது கோட்டை பெருமாள் கோவிலில் இருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசை வருகிறது..

Saturday, September 17, 2016
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி திருக்கோவில்
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி திருக்கோவில்..
சேலத்தில் இருக்கும் பெருமாள் கோவில்களில் மிகவும் பழமையானது சேலம் கோட்டையில் அமைத்துள்ள ஸ்ரீ அழகிரிநாத சுவாமி திருக்கோவில்.. புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று நம் கோட்டை பெருமாள் கோவில் சிறப்புகளை காண்போம்
வில்வ மரத்தடியில் குழந்தையாக தோன்றிய திருமகளை அழகியவல்லி எனப்பெயரிட்டு பிருகு முனிவர் வளர்த்தார், ஸ்ரீ என்னும் லக்ஷிமி தேவியே இந்த கோவிலில் எழுந்தருளியதாக கோவில் வரலாறு கூறுகிறது.ஸ்ரீசைலம், ஸ்ரீ சைலபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சேலம் என்று மருவியதாக தலவரலாறு கூறுகிறது, நான்கு கரங்களுடன் பெருமாள் அழகிரிநாதராக எழுந்தருளி, அழகியவல்லியை கரம்பிடித்து பிருகு முனிவருக்கு சாப விமோர்ச்சனம் கொடுத்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது..
ஆறடி உயரம் கொண்ட அற்புத சிலை வடிவாக சங்கு,சக்ர,கதாபாணியாக அழகிரிநாதர் சேவை சாதிக்கிறார்.பெருமாளுக்கு இணையாக சிம்ம முகத்துடன் எட்டுஅடி உயர ஆஞ்சநேயர் கம்பிரமாக காட்சிதருகிறார்..
வைகுண்ட ஏகாதேசியன்று இங்கு சொர்கவாசல் திருப்பு நடைபெறுகிறது.. இதனால் இந்த கோவிலை சொக்கவாசல் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது
Friday, August 26, 2016
சேலம் ஆடி பண்டிகை முழுதொகுப்பு - 2016
சேலம் ஆடி பண்டிகை இனிதே முடியும் தருவாயில் உள்ளது. முகூர்த்தக்கால் நடுதல் ஆரம்பித்து சத்தாபரணம் வரை நான் நிறைய பதிவை கடந்த ஒரு மாதமாக பதிவு செய்து வருகிறேன்.. இன்றுடன் ஆடி முடிவடைகிறது.. சேலத்தில் நடந்த பண்டிகை போல வேறு எங்கும் காண முடியாது.. திருப்பிய இடம் எல்லாம் திருவிழா கோலாகலம் கொண்டாட்டம் என களைகட்டியது.. என்னால் அனைத்து கோவில்களும் சென்று புகைப்படம் எடுக்க முடியவில்லை அவ்வளவு கோவில் திருவிழா. என்னக்கு உதவிய அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!...
இந்த திருவிழாவின் முழுதொகுப்பு 108 புகைப்படமாக.....
இந்த திருவிழாவின் முழுதொகுப்பு 108 புகைப்படமாக.....
Subscribe to:
Posts (Atom)